எளிமையான வாழ்க்கையை வாழுங்கள், அது ஊழலை அகற்றி விடும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற கட்டுமான தொழிலுக்கான விருது வழங்கும் விழாவில் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், எளிமையான வாழ்க்கையை வாழுங்கள், அதுவே ஊழலை அகற்றி விடும் என பேசினார். மேலும் கறுப்பு பண ஒழிப்பு, ஊழல் தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் பல நகரங்களில் நிலத்தின் விலை குறைந்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கடந்த நிதிநிலை அறிக்கையில் உள்கட்டமைப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரியிடம் கோரியிருப்பதகவும் அவர் கூறினார்.