தமிழ்நாடு

நிலவேம்பு குறித்த பதிவு: கமலுக்கு சித்தமருத்துவர்கள் கண்டனம்

நிலவேம்பு குறித்த பதிவு: கமலுக்கு சித்தமருத்துவர்கள் கண்டனம்

webteam

நிலவேம்பை பற்றி தெரியாமல் கருத்தை பதிவு செய்ய வேண்டாம் என அரசு சித்த மருத்துவர்கள் சங்கம் நடிகர் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சித்தமருத்துவரும் கமலின் கருத்தால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். கமலின் நடிப்பு சரியில்லை, எனவே ஒரு நிபுணர் குழுவை வைத்து ஆராய்ந்து அறிக்கை வந்த பின் அவரை நடிக்க அனுமதிக்கலாம் என்று சொன்னால் எல்லோரும் சிரிக்கமாட்டார்களா?

எத்தனையோ தடைசெய்யப்பட்ட மருந்துகள் புழக்கத்தில் இருக்கும் போது அதனை கண்டுகொள்ளாமல் நிலவேம்பை மட்டும் கமல் எதிர்ப்பது ஏன்? அரசியல் ஆசைக்கு நிலவேம்பை இழுக்க வேண்டாம். தேவையின்றி மருந்துகளை பற்றி பேசி, போலி மருத்துவத் தொழில் செய்ய வேண்டாம் என்று கமலுக்கு அரசு சித்த மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.