தமிழ்நாடு

சென்னையில் சித்தா கோவிட் சிகிச்சை மையம் திறப்பு

சென்னையில் சித்தா கோவிட் சிகிச்சை மையம் திறப்பு

Veeramani

சாதாரண கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலே, ஆக்சிஜன் படுக்கை வசதி, ரெம்டெசிவிர் மருந்துகளுக்காக மக்கள் தேடிச் செல்வதை தவிர்க்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலைக்கல்லூரியில் சித்தா கோவிட் சிகிச்சை மையத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலர், சென்னை மாநகர ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கடந்தாண்டு சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவத்தின் மூலம் பலரும் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். சென்னையில் 21ஸ்கீரினிங் சென்டர்கள் உள்ள நிலையில், மக்கள் தேவையினை கருத்தில் கொண்டு அதனை 30ஸ்கீரினிங் சென்டர்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.