தமிழ்நாடு

ராமநாதபுரம் லாக்-அப் என்கவுன்டர் வழக்கு: எஸ்.ஐ-க்கு ஆயுள் தண்டனை 

webteam

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டனம் காவல் நிலையத்தில், லாக்-அப் என்கவுன்டர் விவகாரத்தில் எஸ்.ஐ. காளிதாஸுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சையது முஹம்மது எனபவர் விசாரணைக்காக 2014ம் ஆண்டு எஸ்.பி பட்டணம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எஸ்.ஐ. காளிதாஸால் சையது சுட்டுக்கொலை செய்யப்பட்டார். போலீசாரை கத்தியால் தாக்கியதாகவும் தற்பாதுகாப்புக்காக சுட்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது. 

இது திட்டமிட்ட படுகொலை என சையது தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு ராமநாதபுர மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் லாக்-அப் என்கவுன்டர் விவகாரத்தில் எஸ்.ஐ. காளிதாஸுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் காளிதாஸ் ரூ.2 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அந்த தொகையை சையது குடும்பத்திற்கு வழங்கவேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது