ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகும் பயன்பாடு தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது..
இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும், 84 விழுக்காடு இடங்களில் இன்னும் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்வதாக 'டாக்ஸிக் லிங்க்' என்ற சுற்றுச்சூழல் அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
2025 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை டெல்லி, மும்பைஉள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆய்வுநடத்தப்பட்டது. தடை செய்யப்பட்டபிறகும் பிளாஸ்டிக் பயன்பாடு 84 விழுக்காடாகவும், கட்டுப்பாடு 16 விழுக்காடாகவும் மட்டுமே உள்ளது. அதில் புவனேஸ்வரில் அதிகபட்சமாக 89% விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்த இடங்களில் டெல்லி, மும்பை, குவஹாத்தி நகரங்கள் உள்ளன.
55 விழுக்காட்டினர் கடைகளுக்கு சொந்தமாக பைகொண்டு வருவதாகவும் 45 விழுக்காட்டினர் கடைகளில் பை கேட்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசு கடுமையான சோதனைகளை மேற்கொள்வதோடு, மாற்றுப்பொருட்களுக்கு மானியம் வழங்கவேண்டும் என்றும் இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.