தமிழ்நாடு

பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்: ஆர்வமுடன் கண்டு ரசித்த சுற்றலா பயணிகள்

kaleelrahman

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை கடந்து சென்ற எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பல்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

பாம்பன் தீவையும் மண்டபம் நிலப்பரப்பையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பாம்பன் ரயில் பாலம், இந்தப் பாலம் வழியே தற்போது வரை ரயில் போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில், இந்த ரயில் பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் மற்றும் விசைப்படகள் செல்வதற்காக தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலம் வழியாக மீன்பிடிப் படகுகள் மற்றும் கப்பல்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் சென்று வருவது வழக்கம், இந்நிலையில், இன்று இந்திய எல்லை பாதுகாப்பு படைக்குச் சொந்தமான மூன்று கப்பல்கள் கொச்சியில் இருந்து புறப்பட்டு மேற்கு வங்காளம் செல்வதற்காக பாம்பன் தூக்குப் பாலம் திறக்கப்பட்டது. அதன் வழியாக மூன்று கப்பல்களும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்றது, இதை ராமேஸ்வரம் வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.