தமிழ்நாடு

ராமேஸ்வரம்: திறக்கப்பட்ட பாம்பன் ரயில்வே தூக்குப் பாலம் - கடந்து சென்ற கப்பல்கள்..!

EllusamyKarthik

பாம்பன் ரயில்வே தூக்குப் பாலம் திறக்கப்பட்டு, கப்பல்கள் கடந்து சென்றன. ராமேஸ்வரம் தீவையும், ராமநாதபுரத்தையும் இணைக்கும் வகையில் 100 ஆண்டுகளுக்கு முன்னதாக கடலில் மேல் ரயில்வே பாலம் கட்டப்பட்டது. கப்பல்கள் வரும்போது ரயில்வே பாலம் தூக்கப்பட்டு, அவைகளுக்கு வழிவிடும் வகையில் அப்போதே பாலம் வடிவமைக்கப்பட்டது. 

இந்நிலையில், தனியார் கப்பல் உள்ளிட்ட சில கப்பல்கள் செல்லும் வகையில் இன்று பாம்பன் ரயில்வே தூக்குப்பாலம், தூக்கப்பட்டது. அப்போது காக்கிநாடாவிலிருந்து பாம்பே செல்லும் தனியார் கப்பல் பாலத்தை கடந்து சென்றது. 

இதேபோல, இந்திய கடற்படைக்கு சொந்தமான புதிய 2 ரோந்து கப்பல்களும் கொச்சியிலிருந்து மேற்கு வங்கம் நோக்கி சென்றன. இதுதவிர, பாம்பன் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைப்படகுகள் அவர்களுக்கு தேவையான பகுதிகளுக்கு படகுகளை நிறுத்துவதற்காகவும் பாம்பன் பாலத்தை கடந்து சென்றன.