தமிழ்நாடு

பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற கப்பல்: பார்த்து பரவசமடைந்த சுற்றுலா பயணிகள்

kaleelrahman

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை கடந்து சென்ற இழுவைக் கப்பல், விசைப் படகுகளை சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்வையிட்டனர்.

மண்டபம் நிலப்பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதில் பாம்பன் ரயில் பாலம் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் இருந்து மும்பை செல்வதற்காக நேற்று இரவு இழுவைக் கப்பல் ஒன்று பாம்பன் வடக்கு கடற்கரை பகுதிக்கு வந்தடைந்தது.

இதையடுத்து பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை கடந்து செல்வதற்கான அனுமதியை துறைமுக அதிகாரிகளிடம் பெற்று ரயில் தூக்கு பாலத்தை கடந்து பாம்பன் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதியை நோக்கி சென்றது.

இதையடுத்து தென்கடல் பகுதியில் இருந்து வடபகுதிக்கு 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட வரிசையில் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை கடந்து சென்றன. இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்துச் சென்றனர்.