தமிழ்நாடு

10 வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றி பெற்ற பெண்

10 வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றி பெற்ற பெண்

webteam

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெண் ஒருவர், ‌10 வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிச்சிவிளை ஊராட்சியில் தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் பிற சமூகத்தினர் தேர்தலில் வாக்களிக்கவில்லை‌. ஊராட்சியில் உள்ள 6 வார்டுகளின் உறுப்பினர்‌ பதவிக்கும் போட்டியிடவில்லை.

இந்நிலையில்‌ தலைவர் பதவிக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி, சுந்தரி ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தலில் மொத்தம் 13 வாக்குகளே பதிவாகியிருந்தன. வாக்குகள் எண்ணப்பட்‌டதில்‌, ராஜலட்சுமி 10 வாக்குகள் பெற்று வெற்‌றி பெற்றார்.