தமிழ்நாடு

நாளை முதல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஷேர் ஆட்டோ சேவை

நாளை முதல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஷேர் ஆட்டோ சேவை

webteam

பயணிகளின் வசதிக்காக நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் 10 மற்றும் 15 ரூபாய் கட்டணத்தில் ஷேர் ஆட்டோ மற்றும் கார் சேவையை அறிமுகப்படுத்துகிறது.

ஷேர் ஆட்டோ சேவை குறிப்‌‌பிட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தபட உள்ளதாக மெட்ரோ தெரிவித்துள்ளது. முதலில் சோதனை ஓட்டமாக 6 மாதங்களுக்கு, அசோக் நகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, செயின்ட் தாமஸ் மவுன்ட், நந்தனம், மற்றும் திருமங்‌லம் ஆகிய எட்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ சேவை 10 ரூபாய் கட்டணத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

அதேபோல், கோயம்பே‌‌டு, ஆலந்தூர், அண்ணா நகர் கிழக்கு, ஏஜி.டி.எம்.எஸ், மற்றும் வடபழனி ஆகிய ஐந்து மெட்ரோ ரயில்நிலையங்களில் கார் சேவை ரூ.15 கட்டணத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தச் சேவையானது மெட்ரோ ரயில் நிலையங்களைச் சுற்றி 3 கிலோ மீட்டர் தூரம் வரை குறிப்பிட்ட வ‌ழித்தடங்களில் ‌இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை காலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை இந்தச் சேவை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.