தமிழ்நாடு

திருமண உறவுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை - திமுக எம்பி அப்துல்லா கேள்வி

kaleelrahman

திருமண உறவுகளில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் சார்ந்த வன்முறைகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மத்திய அரசு செய்கிறதா என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லாஹ் தங்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பந்தமான விஷயங்கள் குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் இருக்கின்றது. 

ஆனால், திருமண உறவுகளில் இருக்கும் வன்முறை குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை என தோன்றுகிறது. எனவே இந்த விஷயத்தில் பெரும்பாலான பெண்கள் அமைதியாக இருந்து விடுகிறார்கள். இதற்காக இளம் வயதிலேயே பெண்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது இதற்காக பள்ளி மற்றும் கல்லூரி அளவில் விழிப்புணர்வு திட்டங்கள் ஏதேனும் மத்திய அரசு செய்து வருகிறதா என கேள்வி எழுப்பினர்.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி அளவிலேயே அவர்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகள் சார்ந்த விஷயங்கள் விளக்க படுவதாகவும், இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது சொந்த தொகுதிக்குட்பட்ட மாவட்டங்களில் இதற்கான தனிப்பட்ட கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும் என மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கேட்டுக்கொண்டார்.