தமிழ்நாடு

திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் உறவு கொண்டது மிருகத்தனம்: நீதிமன்றம்

திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் உறவு கொண்டது மிருகத்தனம்: நீதிமன்றம்

webteam

திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணிடம் பாலியல் உறவு செய்து ஏமாற்றியது மிருகத்தனமானது என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்த அம்பத்தூரில் இளைஞர் ஒருவர், தனது சகோதரியின் மகளை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் உறவு வைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால், அந்த இளைஞர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய அந்த இளைஞருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திருமணத்திற்கு மறுத்து அந்த இளைஞர் தப்பியோடிவிட்டதால், முன்ஜாமீனை தள்ளுபடி செய்ய வேண்டும் என காவல்துறையினர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, பெண்களுக்கு எதிரான குற்றம் சமுதாயத்திற்கு எதிரானது என்று தெரிவித்தார். சகோதரியின் மகளை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியது மிருகத்தனமானது என்று கண்டித்த நீதிபதி, இந்த சமுதாயத்தின் பாவமாக மனுதாரர் இருப்பதாகவும் கூறினார்.

அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது சகோதரி மகளை திருமணம் செய்வதற்காகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கருவுற்ற பெண், திருமணம் செய்ய மறுத்த தனது மாமன் மீது ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட புகார் அளித்தார். அதனடிப்படையில் இளைஞர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜாரன வக்கீல், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் மனுதரார் இருவரும் உறவினர்கள் என்றும், பெண்ணை திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்துவதாக தெரிவித்தார். போலீஸ் தரப்பில் இளைஞர் திருமணத்திற்கு மறுத்து தப்பியோடி விட்டதாகவும், எனவே முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

இதனை அடுத்து முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, பெண்களுக்கு எதிரான குற்றம் சமுதாயத்திற்கு எதிரான குற்றம் என்றும். மனித உரிமை மீறல்கள் என தெரிவித்துள்ளார். மேலும் சொந்த சகோதரியின் மகளை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தது மிருகத்தனமனாது என்றும், மனுதரார் இந்த சமுதாயத்தின் பாவம் என்றும் குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது; அவர்களையும் சக மனிதர்களாக மதிக்க வேண்டும் எனவும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் கூறினார்.