சேலத்தில் மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறி, ஆசிரியர் மீது உறவினர்கள் கடுமையான தாக்குதல் நடத்தினர்.
சேலம் மெய்யனூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, ஆசிரியர் சதீஷ் என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி நடந்ததை தனது பெற்றேரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், உறவினர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென ஆசிரியரை தாக்கக் தொடங்கினர்.
சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டத்தில் அவர் லேசான காயமடைந்ததாக தெரிகிறது. தகவலறிந்து அங்கு விரைந்த பள்ளப்பட்டி காவல்துறையினர் ஆசிரியரை மீட்டனர். மேலும் புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.