தமிழ்நாடு

கோவையில் விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு

கோவையில் விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு

webteam

கோவையில் கழிவுநீர்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்கள்‌ மூவர் உயிரிழந்தனர். 

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நகைப்பட்டறை வைத்திருப்பவர் ரவிசங்கர். இவரது நகைப்பட்டறையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் மூன்று துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அதிகாலை 2 மணியளவில் நகைப்பட்டறையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி ஏழுமலை, கவுரிசங்கர் உள்ளிட்‌ட மூவர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து நகைப்பட்டறை உரிமையாளர் ரவிசங்கர் மீது ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமைறைவான நகைப்பட்டறை உரிமையாளர் ரவிசங்கரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.