மெரினாவில் போராட்டம் ஏதும் நடக்கவில்லை என்றும் வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மயிலாப்பூர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறைக்கு அவர் அளித்த தகவலில், சமூக வலைத் தளங்களில் தவறான தகவல் பரப்புவோர் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மெரினாவில் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
விவேகானந்தர் இல்லம் அருகே போராட்டம் நடத்த முயன்றதாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். போராட்டம் எதுவும்
நடைபெறாமல் தடுக்க ஆயுதப்படை உள்ளிட்ட காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.