கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்து, அதனை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி
தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்து, அதனை அரசுக்கு தெரியப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்க தடையில்லை என தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, அரசின் உத்தரவுகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். போதுமான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன என்றும், மத்திய, மாநில அரசுகள் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.