அண்ணா பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் , அ.தி.மு.க சார்பில் பல்வேறு இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பழனியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.பி. வைத்திலிங்கம் கலந்து கொண்டு பேசினார்.
பேசிய அவர் “தினகரனுக்கும், சசிகலா குடும்பத்துக்கும்,அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவர்கள் எல்லாம் இடையிலே வந்த இடைச்செருகல்கள் ; ஜெயலலிதா இவர்களை உதவியாளர்களாக வைத்துக் கொண்டார். அரண்மனையிலே வேலை பார்ப்பவர்கள் எல்லாம் ராஜாவாக முடியாது என்று சசிகாலாவையும், தினகரனையும் வைத்திலிங்கம் விமர்சனம் செய்தார்.
“வேலை செய்ய வந்தவர்கள் எல்லாம் ராஜாவாக நினைத்தால் அவர்கள் அறியாமை, ஏனெனில் அதிமுக என்பது மாபெரும் தொண்டர்களின் இயக்கம், அண்ணாவால் உருவாக்கப்பட்ட இயக்கம் யாருக்கு பின்னாலும் இவர்கள்தான் ஆள வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை, தகுதி உள்ளவர்களுக்கு ஆள உரிமை உண்டு என்பதே விதி” என்று வைத்திலிங்கம் பேசினார்
Read Also -> தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தொடர்ந்து பேசிய அவர், சசிகலா மற்றும் தினகரனை கடுமையாக விமர்சித்தார்.