rain, vijay x page
தமிழ்நாடு

HEADLINES |விஜய் சுற்றுப்பயணத் திட்டத்தில் மாற்றம் முதல் மழை எச்சரிக்கை வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, விஜயின் சுற்றுப்பயணத் திட்டத்தில் மாற்றம் முதல் மழை எச்சரிக்கை வரை விவரிக்கிறது.

PT WEB

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில், விஜயின் சுற்றுப்பயணத் திட்டத்தில் மாற்றம் முதல் மழை எச்சரிக்கை வரை விவரிக்கிறது.

  • தவெக தலைவர் விஜயின் பரப்புரை சுற்றுப்பயண திட்டத்தில் மாற்றம்.. டிசம்பர் 20ஆம் தேதி வரை திட்டமிட்டிருந்த பரப்புரை, பிப்ரவரி 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு... கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் பீகார் மாநிலத்திற்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போக்குவரத்து திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

  • மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில், வன்முறை வெடித்த நிலையில், 4 பேர் உயிரிழந்தனர்.

  • பிலிப்பைன்ஸ், தைவானை புரட்டிப்போட்ட ரகாசா புயல் தற்போது தென்சீனா பகுதிகளில் கரையை கடந்தது.

விஜய்
  • அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் வாஷிங்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • ஆசியக் கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

  • தனது சகோதரியும், சக செஸ் வீராங்கனையுமான வைஷாலியுடன் எப்போதும் போட்டியிடமாட்டேன் என கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய டி20 தரவரிசையில், இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

  • அரசு விதித்த கடுமையான விதிமுறைகள் காரணமாக, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கால்பந்து அணிகள் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.