தமிழ்நாடு

கந்துவட்டி கொடுமையை தடுக்க காவல்துறையில் தனிப்பிரிவு: நெல்லை ஆட்சியர் தகவல்

கந்துவட்டி கொடுமையை தடுக்க காவல்துறையில் தனிப்பிரிவு: நெல்லை ஆட்சியர் தகவல்

Rasus

கந்துவட்டி கொடுமையை தடுக்க காவல்துறையில் தனிப்பிரிவு உருவாக்கப்படும் என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்த 4 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தா‌ன நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளிக்க தனி தொலைபேசி எண் ஏற்படுத்தப்படும் என்றும் கந்துவட்டி கொடுமையை தடுக்க காவல்துறையில் தனிப்பிரிவு உருவாக்கப்படும் என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தி‌த்த பிறகு செய்தியாள‌ர்களுக்கு பேட்டி அளித்த சந்தீப் நந்தூரி இதனை தெரிவித்தார்.