தமிழகத்தில் திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனைகளும், சிறப்பு பிரிவும் தொடங்கப்பட உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பாப்பாபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இ சிகரெட் தடை அறிவிப்பு உள்ளிட்ட மானிய கோரிக்கையின் விவாதத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளை வீடுகள் தோறும் சென்று கண்டறியும் திட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். இதுதவிர தமிழகத்தில் திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனைகளும், சிறப்பு பிரிவும் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.