தமிழ்நாடு

கோடநாடு வழக்கு: தொழிலதிபர் ஆறுமுகசாமியின் மகன் செந்தில்குமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

JustinDurai

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தொழில் அதிபர் ஆறுமுகசாமியின் மகன் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
      
சென்னை சிஐடி நகர் ஷைலி நிவாஸ் அபார்ட்மெண்டில் 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் செந்தில்குமாரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, பிஜின் குட்டி, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையாறு மனோஜ் ஆகிய 10 பேர் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

இந்த வழக்கில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 220 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கண்ணனிடம் கடந்த 29 ஆம் தேதி விசாரணை நடைபெற்ற நிலையில், ஆறுமுகசாமி மகன் செந்தில் குமாரிடம் விசாரணை  மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிக்கலாமே: தொடரும் கொலைகள்.. அவிழாத மர்மங்கள்.. எடப்பாடி பழனிசாமியை பயமுறுத்துகிறதா கோடநாடு வழக்கு?