அண்ணாமலை புதியதலைமுறை
தமிழ்நாடு

”நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்; ஒரே சாமி கும்பிடுறவங்க” - அண்ணாமலை சொல்வதென்ன?

அரசியலுக்கு வருவதற்கு முன்பு செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து என் அம்மா கையால் சாப்பிட்டும் இருக்கிறார்- அண்ணாமலை

Jayashree A

இன்று சென்னையில் செய்தியாளர்களின் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, ”சமீபத்தில் ஒட்டன்சத்திரம் அருகில் ஒருவரின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் எங்களின் உறவினர்தான். அதே போல் நானும் செந்தில்பாலாஜியும் பங்காளிகள் ஒரே கோவிலுக்கு செல்பவர்கள்தான். ஜோதிமணி அக்காவும் எனக்கு உறவினர். எனக்கு ஜோதிமணி அக்காவை 20 வருடமாகத் தெரியும்.

திமுகவில் கொங்கு பகுதியில் இருக்கும் அனைவரும் ஏதோ ஒருவிதத்தில் உறவினர்கள்தான். அதற்காக நான்சொல்லித்தான் அவர்கள் வீட்டில் ரெய்டு வருகிறது என்றால் அது உண்மை கிடையாது. இது வரை நான் வருமானவரித்துறைக்கு போன் செய்தது கூடக் கிடையாது. நாங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து என் அம்மா கையால் சாப்பிட்டும் இருக்கிறார்” என்கிறார்.

இது குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.