செந்தில் பாலாஜி கோப்பு புகைப்படம்
தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஹெல்த் அப்டேட்!

குறைந்தபட்சம் 20 நாட்களாவது காவேரி மருத்துவமனையிலேயே செந்தில் பாலாஜி சிகிச்சை பெறுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

webteam

இதய பாதிப்புகளுக்காக, காவேரி மருத்துவமனையில் கடந்த 15 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 21 ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 24 மணி நேரம் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து 7வது தளத்தில் இதயவில் சிறப்பு சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார் அவர். இதையடுத்து 24 ஆம் தேதி தனியறைக்கு மாற்றப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ‘அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் 20 நாட்களுக்கு மேல் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறுவார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திரவ உணவிற்கு பதிலாக திட உணவு வழங்கப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி நடக்க தேவையான பயிற்சி வழங்கப்படுகிறது. இன்னும் அவர் தானாக எழுந்து நடக்க ஆரம்பிக்கவில்லை.

நடைப்பயிற்சி, உணவு பழக்கம் உள்ளிட்ட இயல்பான பணிகளை மேற்கொள்ளும் வரை தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார்’ என காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் சொல்வதாக தெரிகிறது.