அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி PT
தமிழ்நாடு

’உடனேலாம் விசாரிக்க முடியாது’ மீண்டும் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மேல்முறையீடு

PT WEB

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அமைச்சர் செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

உடல்நிலையை கருத்தில் கொண்டு, ஜாமீன் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை நாளையே அவசர வழக்காக எடுத்து கொள்ள வேண்டும் என செந்தில்பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஏன் இவ்வளவு அவசரமாக உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளீர்கள் என செந்தில்பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால்தான், அவசரமாக ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ராம் சங்கர் எடுத்துரைத்தார்.

அதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் நாளையே செந்தில்பாலாஜி வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும், வரும் 30ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.