தமிழ்நாடு

மறைந்தார் மூத்த எழுத்தாளர் ‘வாத்தியார்’ ஆர்.எஸ்.ஜேக்கப்

மறைந்தார் மூத்த எழுத்தாளர் ‘வாத்தியார்’ ஆர்.எஸ்.ஜேக்கப்

நிவேதா ஜெகராஜா

திருநெல்வேலியை சேர்ந்த மூத்த எழுத்தாளர் வாத்தியார் R.S.ஜேக்கப், நேற்று இரவு 11 மணிக்கு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

நெல்லை சதி வழக்கில் கைதான 93 பேரில், ஆர்.எஸ்.ஜேக்கப்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சதி வழக்கில் இவருடன் சிறைவாசம் பெற்றவர்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவும் ஒருவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு கதைகள் எழுதியவரும் மற்றும் போராடியவருமான ஆர்.எஸ்.ஜேக்கப், ‘வாத்தியார்’ என்ற நாவல் மூலம் பிரபலமானார். அதனாலேயே இவரை ‘வாத்தியார்’ ஜேக்கப் என்று மக்கள் அழைத்தனர். இவருக்கு தொழிலும் ஆசிரியர் என்பதால் பெயர்க்காரணமும் அப்படியே அமைந்து விட்டது.

இந்நிலையில், உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.