தமிழ்நாடு

`கம்யூ. தலைவர் நல்லகண்ணு எப்படி இருக்கிறார்?’- நேரில் சந்தித்தபின் மா.சுப்பிரமணியன் பதில்

webteam

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு-வை சந்தித்து நலம் விசாரித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியபோது, “உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ரத்தோரின் மாமியார் ராஜகுமாரி இங்கு 2 வாரங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு நலம் பெற்று தற்போது தொடர் சிகிச்சையில் இருக்கிறார். அந்த அமைச்சர் என்னை தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்தார்.

சீர்காழியைச் சேர்ந்த அபிநயா என்ற சிறுமிக்கு மரபணு காரணமாக 2 கால்களும் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு அங்கு சிகிச்சை பலனளிக்கவிங்லை என்பதால் முதல்வருக்கு கோரிக்கை வைத்தார். அதனால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து கால்களை இழக்காமல் மீண்டும் நடக்க முடிவதாக சிறுமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

1 மாதத்திற்குப் பிறகு ரூ.1 லட்சம் மதிப்பிலான காலணி வாங்கி பொறுத்தப்பட உள்ளது. காலணிக்கான செலவு அனைத்தும் இலவசமாகவே மேற்கொள்ளப்பட உள்ளது. மருத்துவமனையில் உள்ள கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார்” என்றார்.