குமரி அனந்தன் மறைவு முகநூல்
தமிழ்நாடு

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவு!

93 வயதான குமரி அனந்தன், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிர் பிரிந்தது.

PT WEB

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன், வயது மூப்பு காரணமாக காலமானார்.

93 வயதான குமரி அனந்தன், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிர் பிரிந்தது. குமரி அனந்தன் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

நாடாளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை பெற்று தந்தவர். தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார். மேடைப்பேச்சில் மட்டுமின்றி எழுத்திலும் தீவிர ஈடுபாடு கொண்ட குமரி ஆனந்தன், இலக்கிய செல்வர் என பாராட்டப்பட்டவர். கடந்தாண்டு தமிழ்நாடு அரசுக்கு அவருக்கு, தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவித்திருந்தது. தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன், குமரி அனந்தனின் மகள்களில் ஒருவர்.