இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா வருகிற 29ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. கலைவாணர் அரங்கில் நடக்கும் இந்த விழாவை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
“தமிழகத்தில் மாபெரும் தலைவர்கள் பலர் வாழ்ந்திருந்தாலும், எவருக்கும் அவர்கள் வாழும் காலத்திலேயே நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதில்லை.
பொதுவாழ்வில் நேர்மை, தொண்டு, தியாகம், எளிமை ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் நல்லகண்ணு வாழும் காலத்திலேயே நாமும் வாழ்கிறோம் என்பது நமக்குள்ள பெருமை” என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.