செய்தியாளர்: மணிகண்டபிரபு
திருமலை நாயக்கரின் 442வது பிறந்தநாளையொட்டி திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதைத் தொடர்ந்து முன்ளாள் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முன்னாள்; அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுகவில் சலசலப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, எங்கள் கட்சியை தான் எப்போதும் பேசுவார்கள். ஒன்னுமே இல்லாத பிரச்னை. பாராட்டு விழா நடத்தியது விவசாய சங்கம்.
அந்த விழாவில் எம்ஜிஆர் ஜெயலலிதா படங்கள் இல்லை என செங்கோட்டையன் கூறியுள்ளார். இதை பெரிதாக எடுத்துக் கொண்டு விவாதம் செய்கின்றனர். திமுகவின் கைக்கூலிகளான சில ஊடகங்கள் இதை போல் பேசுகின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவை சிறப்பாக வழி நடத்தும் எடப்பாடி பழனிசாமி புகழை சீர்குலைக்கும் வகையில் திமுக கைக்கூலிகள் இவ்வாறு போட்டி போட்டுக் கொண்டு பேசுகின்றனர். என்ன நியாயம் இது?
எடப்பாடி பழனிசாமி புகழை பெயரை கெடுக்கும் வகையில் திமுக இதை செய்கிறது. எடப்பாடி பழனிசாமியை, செங்கோட்டையன் குறை கூறவில்லை. விழா அமைப்பாளர்களை தான் குறை கூறினார் இதற்கு எதற்கு விளக்கம் என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.