sellur raju
sellur raju pt desk
தமிழ்நாடு

“விஷாலே அரசியலுக்கு வரும்போது விஜய் வரக்கூடாதா?” - EPS பிறந்தநாள் விழாவில் செல்லூர் ராஜூ பேச்சு!

webteam

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ 25 கிலோ கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். இதைத் தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, அப்போது பேசுகையில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களையும் இங்கு காண்போம்

தமிழக அமைச்சரவை மாற்றத்தை எப்படி பார்க்கின்றீர்கள்?

நிதியமைச்சராக இருந்த பிடிஆர் மாற்றப்படுவதற்கு முழுக்க முழுக்க 30 ஆயிரம் கோடி தான் காரணம். நுணலும் தன் வாயால் கெடும் என்பதை போல பிடிஆர் வாயால் கெட்டுப் போய்விட்டார். உண்மையைச் சொல்லி ஆடியோவால் மதுரைக்காரன் மாட்டிக்கிட்டான். மதுரை மாடு பிடிபட்டது!

cm stalin

மதுரை பிடிஆர், அமைச்சரவையில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். இளவயது அமைச்சர் மனோ தங்கராஜ் வைத்திருந்த ஐடி துறையை பழனிவேல் தியாகராஜனுக்கு முதல்வர் கொடுத்திருப்பதை பார்த்தாலே பிடிஆர் மீது முதல்வருக்கும், திமுக குடும்பத்திற்கும், உதயநிதிக்கும், சபரீசனுக்கும் கோபக்கனல் உள்ளது என்பது தெரிகிறது. அமைச்சரவை மாற்றத்தின் மீதான காரணம் இதுதான். இதுதான் உண்மை.

தங்கம் தென்னரசு சிறந்த நிர்வாகி. மிகப்பெரிய ஆற்றலாளர். அவர் எந்த துறையாக இருந்தாலும் அதனை மிகச் சிறப்பாக கவனிக்கக் கூடியவர். எந்த துறையாக இருந்தாலும் அதில் முத்திரை பதிக்கக் கூடியவர். நிதியமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு எந்த இடத்தில் இருந்தாலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். மாற்றுக் கட்சிக்காரர்களையும் மாற்றுத் தரப்பினரையும் குறை சொல்லாமல் சிறப்பாக செயல்படக் கூடியவர். நிதித்துறை தங்கம் தென்னரசு கையில் சென்றிருப்பது சிறப்புக்குரியது.

minister PTR

ஓபிஎஸ் - டிடிவி சந்திப்பு குறித்து உங்கள் கருத்து...?

அரைத்த மாவையே அரைக்க வேண்டாம். ஒபிஎஸ்- டிடிவி இணைப்பு குறித்து கேட்க வேண்டாம். 2026-ஆ, 2024-ஆ என்று தெரியவில்லை... அப்போது மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைக்க உள்ளார்.

நிதியமைச்சர் ஆடியோவை மக்கள் மத்தியில் கொண்டு சென்றது அதிமுக தான். திமுகவுக்கு ஊழல் என்பது சாதாரண விஷயம். அதிமுக வாய்ஸ் கொடுத்ததால் தான் ஆடியோ விவகாரம் பெரிதாக மாறியது. பாஜகவால் ஆடியோ விவகாரம் பெரிதாகவில்லை” என்றார்.

அண்ணாமலை மீது முதல்வர் மற்றும் மூத்த நிர்வாகிகள் வழக்கு தொடுப்பதை எப்படி பார்க்கின்றீர்கள்?

“பாஜக மேல வழக்கு போட்டால் பதில் சொல்லலாம். அண்ணாமலை மீது வழக்கு போட்டால் எப்படி பதில் சொல்ல முடியும்?”

ஓ.பி.எஸ் இல்லாமல் எடப்பாடியால் முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் கூறியதை எப்படி பார்க்கின்றீர்கள்?

“எதிர் முகாமில் உள்ளவர்கள் அப்படிதான் சொல்வார்கள். பொறுத்திருந்து பாருங்கள்... எடப்பாடி தலைமையில் தான் ஆட்சி அமைப்போம்! எங்களுடைய ஒரே அரசியல் எதிரி திமுக மட்டும் தான். பாஜகவும், காங்கிரஸூம் எங்கள் நண்பர்கள் தான். எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்”

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக சொல்லப்படுவதை எப்படி பார்க்கின்றீர்கள்?

“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒருசில படங்கள் ஹிட் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வருகிறேன் என சொல்லும் போது, பல ஹிட் படங்களை கொடுத்த விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம்.

கமல் கூட மக்களுக்கு நல்லது செய்யப் போவதாக சொல்லி தான் மக்கள் நீதி மய்யம் என கட்சி ஆரம்பித்தார். இப்போது நீதியும், மய்யமும் எங்கே போனது என தெரியவில்லை. எனவே, விஜய் அரசியலுக்கு வந்து தேர்தலை சந்திக்கட்டும். அதன் பின்னரே அவருடைய செயல்பாடுகள் குறித்தும், அவருடன் கூட்டணி வைப்பதா என்பது குறித்தும் சொல்ல முடியும்”