செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ கோப்பு புகைப்படம்
தமிழ்நாடு

“எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான்; அண்ணாமலை Just பாஜக மாநில தலைவர்!”- செல்லூர் ராஜூ

PT WEB

மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க., மாநாட்டுக்காக தமிழக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள். பணிசெய்து வருகின்றனர். இதில் இன்று மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே ரிக்ஷா பேரணியை துவக்கி வைத்து, ரிக்ஷா ஓட்டினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெற உள்ள மாநாடு, இதற்கு முன்பு நடந்த மாநாடுகளை விடவும், இதற்கு பின் நடக்கவுள்ள மாநாடுகளை விடவும் யாரும் நடத்த முடியாத அளவிற்கு அமையும். ஒரு எம்.ஜி.ஆரின் படத்தை மிஞ்ச வேண்டும் என்றால் மற்றொரு எம்.ஜி.ஆர் படம் தான் வேண்டும். அதுதான் இதன் வெற்றியை முறியடிக்கும். அது போல் அதிமுக மாநாட்டை அதிமுக தான் முறியடிக்கும்.

செல்லூர் ராஜூ

ஓ.பி.எஸ் மீதான விமர்சனம்...

ஓ.பி.எஸ்., குறித்து நான் விமர்சித்த அந்த வார்த்தைகள் நான் சொன்னது அல்ல. இதற்கு முன் பலரும் கட்சியை விட்டு வெளியேறிய போது ஜெயலலிதா குறிப்பிட்டது. அதிமுகவின் கோவிலுக்குள் இருக்கும் வரை அவர்கள் கல்லாக இருந்தாலும் மதிப்போம். கோவிலுக்குள் இருந்து வெளியே வந்துவிட்டால் அவர்களை மிதித்து விட்டு சென்று விடுவோம்.

கொடநாடு வழக்கு குறித்து...

கொடநாடு வழக்கை தீவிரமாக விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி. அந்த வழக்கில் ஈடுபட்டது திமுகவினர் தான் என்பது அப்போதே தெரியவந்தது. துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போதே கொடநாடு வழக்கு விசாரணை குறித்து அவருக்கு நன்றாக தெரிந்திருந்தும், இப்போது போராட்டம் நடத்துகிறார் என்றால் அவரது நோக்கம் என்ன?

kodanadu estate

அண்ணாமலை குறித்து...

அண்ணாமலை எங்களுக்கு "Just like" அவ்வளவு தான்! எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் மோடி. மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிச்சாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை?

காவல்துறை Spot Fine பற்றி...

காவல்துறையினர் ஸ்பாட் பைன் என்ற பெயரில் மக்களை துன்பத்துக்கு உள்ளாக்கி வருகின்றனர். திமுக ஆட்சியில் விலைவாசி உள்ளிட்ட எல்லாமே வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மதுரையில் வெயில் கூட வரலாற்றில் இல்லாத அளவுக்கு 108 டிகிரி அடித்துள்ளது" என்றார்.