ஓமலூரில் இன்று கூடிய கோழிச் சந்தையில் விற்பனை அமோகமாக இருந்ததால் கோழி வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கூடும் கோழிச் சந்தைக்கு அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வருவது வழக்கம். இந்த சந்தைக்கு கட்டு சேவல்கள், செஞ்சேவல்கள், குட்டை சேவல், நீல கழுத்து சேவல், முட்டை கோழி, வெடக்கோழி போன்ற பல்வேறு வகை கோழிகள் கொண்டு வரப்படும். இங்கு 150 ரூபாயில் துவங்கி மூன்றாயிரம் ரூபாய் வரை கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன.