சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, முருங்கைக்காய் விலை அதிகரித்துள்ளது. பனிக்காலம் காரணமாக முருங்கைக்காய் வரத்து குறைந்ததால் அதன் விலை உயர்ந்துள்ளது.
தற்போது ஒரு கிலோ முருங்கைக்காய் 400 ரூபாய்க்கும், சில்லறை விலையில் 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி ஒரு கிலோ 70ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் 90 ரூபாய் வரை விற்பனையாகிறது.
இதே போல கடலூரிலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. மொத்த விற்பனை கடையில் ஒரு கிலோ தக்காளி 54 ரூபாய்க்கும், சில்லறை விலையில் 60 முதல் 65 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.