கோவையில் ஓடும் ரயில் முன் செல்ஃபி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் ரயில் மோதி உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் சுஜித், நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இவர் தனது நண்பர் சதீஷ்குமார் உடன் முத்துக்கவுண்டன் புதூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே புகைப்படம் எடுக்க சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரயில் முன்பு இருவரும் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது வேகமாக வந்த ரயில் மோதியதில் இருவரும் தூக்கி எரியபட்டு ஆபத்தான நிலையில் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பட்ட சுஜித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சதீஷ்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.