தமிழ்நாடு

“அதிபர் நித்யானந்தா இருக்கிறார்; கைலாசா சென்று வாழ்வோம்”-சீமான்

“அதிபர் நித்யானந்தா இருக்கிறார்; கைலாசா சென்று வாழ்வோம்”-சீமான்

webteam

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் தமது குடியுரிமை பறிக்கப்பட்டால் கைலாசா நாட்டுக்கு செல்லப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “என்.ஆர்.சி. வந்துவிட்டால் எனக்கு குடியுரிமை கிடைக்காது. எங்களுக்கு பிரச்னை இல்லை, கைலாசா நாடு உருவாகிடுச்சு. எங்கள் அதிபர் நித்யானந்தா இருக்கிறார். கைலாசாவுக்கு போய் அழகாய் வாழ்வோம்” என நகைச்சுவையாக தெரிவித்தார்.