தமிழ்நாடு

“என் திட்டங்களை ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் நிறைவேற்றுகிறார்” - சீமான் 

“என் திட்டங்களை ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் நிறைவேற்றுகிறார்” - சீமான் 

webteam

தமிழ்நாட்டில் தான் கூறும் திட்டங்களை ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியற்றுக்கொண்டதில் இருந்து அதிரடியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறார். அதில் ஒன்றுதான் ஆந்திர போலீஸாருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்கும் திட்டம். அதன்படி விடுமுறை திட்டம் அமல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நெல்லையில் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பேசிய சீமான்,  ஜெகன்மோகன் ரெட்டியில் அதிரடி நடவடிக்கைகளை குறிப்பிட்டு பேசினார். அதில் ''தமிழ்நாட்டில் தான் கூறும் திட்டங்களை ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்'' எனத் தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், ஆந்திர முதல்வர் எனது புத்தகத்தை வைத்திருப்பார் என நினைக்கிறேன். நான் சொன்னது போல் ஜெகன்மோகன் ரெட்டி காவலர்களுக்கு விடுமுறை கொடுத்துள்ளார். நான் இங்கு சொல்லும் யோசனைகளை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிதான் செயல்படுத்துகிறார் எனத் தெரிவித்தார்.