seeman
seeman pt desk
தமிழ்நாடு

கருணாநிதியும் ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்துவிட்டுச் சென்றனர் - சீமான்

webteam

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் மலை இல்லையேல் மழை இல்லை என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் பேசியபோது...

“அதிகாரத்தை கொடுத்தால் 5 ஆண்டுகளில் தமிழகத்தை பச்சைபோர்வையாக போர்த்திகாட்டுவோம். ஒரு நாட்டின் பரப்பில் 33 விழுக்காடு காடுகள் இருக்க வேண்டும். ஆனால், இங்கு 13 விழுக்காடு காடுகள் தான் இருப்பதாக சொல்கிறார்கள். எங்களிடம் ஆட்சி வந்தால் மரம் நடுதலை மக்கள் இயக்கமாக்கிக் காட்டுவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் விற்பனைக்கு கிடையாது. தண்ணீரை பூமியில் இருந்து உறிஞ்சி எடுப்பதன் மூலம் உலக உயிர்களுக்கு பச்சை துரோகத்தை செய்கிறார்கள். தண்ணீர் மனித தேவை மட்டுமல்ல உலக உயிர்களுக்கும் தேவை. நான் போதிக்கும்போது உங்களுக்கு தெரியாது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் பாதிக்கும்போது தெரியும்.

Seeman

தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. மக்களுக்கு நல்ல தண்ணீர் கொடுங்கள். ஆயிரம் ரூபாயை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் ஸ்டாலின். ஒரே ஒரு ஓட்டு இந்த விவசாயிக்கு (நாதக-விற்கு) போடுங்கள். 50 ஆண்டுகள் திமுக அதிமுகவிற்கு போட்டீர்கள். ஒரே ஒரு முறை 5 ஆண்டுகள் கொடுங்கள். பூமியின் சொர்கமாக தமிழகத்தை மாற்றிக் காட்டுகிறோம்.

என் மக்களுக்கு ஒரு மனநோய் இருக்கிறது. ஆடு மாடு மேய்ப்பது அசிங்கம் இல்லை. உலகம் இயற்கை உணவுக்கு திரும்புகிறது. ஆனால், உற்பத்தி இல்லை. மதுபானக் கடையில் மது விற்பனை செய்பவன் அரசு வேலை என்றால், ஏன் விவசாயத்தை அரசு வேலையாக்க முடியாது? நான் ஏர்போர்ட் கட்ட வந்தவன் அல்ல. ஏர்பூட்ட வந்தவன். வேளாண்மை நம் தொழில் அல்ல, நம் பண்பாடு. நிலம் எனது தாய். உலகில் எவனிடமும் கையேந்தாமல் ஒருவரால் வாழ முடியும் என்றால் அது விவசாயி தான். விவசாயி வாழ முடியாத நாடு சுடுகாடு.

கருணாநிதி பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு இறந்துபோனார். ஜெயலலிதா பல கொடும் திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு இறந்துபோனார். ஆனால், நீ உன் பிள்ளைகளுக்கு என்ன வைத்துவிட்டுப் போவாய். எல்லாம் பணம் என்றால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழக மக்களின் மணல் தேவைக்கு மட்டுமே மணல் அள்ளப்படுகிறதா என அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கேளுங்கள். மண்ணின் வளம் மக்களுக்கு தானே... அது எப்படி தனிப்பட்ட முதலாளிக்கு சொந்தமானது.

cm stalin

பூமிக்குள் இருந்து எடுக்கும் செல்லாக்காசு அரசுக்கு சொந்தமானது என்றால் கனிமவளங்கள் எப்படி தனிப்பட்ட முதலாளிக்குச் சொந்தமானது. மலை பொதுச்சொத்து. கடற்கரை என்ன உங்களுக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளதா? அது இயற்கையின் கொடை. மீனவர்களின் வாழ்வாதாரம். இரண்டு கட்சிகளின் சொத்தாக எப்படி மாற்றினீர்கள்? திமுக, அதிமுகவிற்கு பட்டா போட்டு கொடுத்துள்ளார்களா? கடற்கரையை கல்லறையாக்கியது எவ்வளவு பெரிய கொடுமை! நாங்கள் அதிகாரத்திற்கு வரும்போது நீதிமன்றம் மூலம் ஆணை பெற்று அகற்றுவோம்.

உங்களிடம் அதிகாரம் இருக்கிறது என வைக்கிறீர்கள். எனக்கு அதிகாரம் வந்தால் உடைப்பேன். நீங்கள் எத்தனை கோடி செலவு செய்து பேனா வைத்தாலும் அதை உடைக்க எவ்வளவு கோடி செலவாகும், ஆகையால் பரீசிலனை பண்ணுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய நீர் தேக்கங்களை உருவாக்குவோம், இருக்கின்ற அணைகளை பாதுகாப்போம், ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம்.

pen memorial

படித்தவர், படிக்காதவர்களுக்கு அரசு வேலை, அதிகாரிகளின் பிள்ளைளைகள் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் படித்தால் அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கபடும் என சொல்லுங்கள். எனக்கு உடம்பு சரியில்லை என்றால் அரசு மருர்த்துவமனைக்கு தான் செல்வேன், அப்பல்லோ, காவேரி மருத்துவமனைகளுக்குக்கு செல்ல மாட்டேன். அரசு அதிகாரிகள் , அமைச்சர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று, காவலருக்கு 8 மணி நேர வேலை, வாரம் ஒரு நாள் விடுப்பு, 6 மாதத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சுற்றுலா என்றெல்லாம் அரசு உத்தரவு பிறப்பிப்பேன்.

இதனால் மன அழுத்தம் குறையும். கையூட்டு வாங்கினால் நடவடிக்கை எடுக்கவேண்டும். 2024 பாராளுமன்றத் தேர்தலிலும், 2026 சட்டமன்ற தேர்தல் நமக்கான தேர்தல். பொதுமக்கள் அனைவரும் விவசாயி சின்னத்திற்கு வாக்காளித்து நல்ல ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசினார்.