செய்தியாளர்: புருஷோத்தமன்
செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானனார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், விஜயை பிரசாந்த் கிஷோர் சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளித்த சீமான், பண கொழுப்பு காரணமாக சந்தித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் எடை தேர்தலாக நடைபெற்றது. டெபாசிட் இழந்ததாக நீங்கள்தான் கூறினீர்கள்,
ரஷ்ய அறிஞர் கூறுகிறார், தேர்தலில் ஓட்டு போடுகிற மக்கள் வெற்றியை தீர்மானிப்பது அல்ல. வாக்குகளை எண்ணும் அதிகாரிகள் தான், பிரச்னையோடு, கண்ணீரோடு, கவலையோடு நிற்கிற எல்லா மக்களோடும் கூட்டணி வைத்து தான் போட்டியிடுகிறேன். தனித்து போட்டியிடவில்லை. தமிழர்களை நம்பி, இயக்கங்களை நம்பி அல்ல தேர்தலில் தனித்து போட்டியிடுகிறேன் என்று சீமான் தெரிவித்தார்.