தமிழ்நாடு

"வடிவேலு மாதிரி இன்னொரு கலைஞர் இனிமேல் பிறந்துதான் வரவேண்டும்" - சீமான்

கலிலுல்லா

இமானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சின்ன போரூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாரதியார் மற்றும் இம்மானுவேல் சேகரனின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய சீமான், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , இமானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கேட்டு கொண்டார். தொடர்ந்து பேசிய அவர்,''விசாரணையின் முடிவில் கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் யார் குற்றவாளி என்பது தெரியவரும்.

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.கவிற்கு சுதந்திர போராட்டத்தில் ஏதாவது பங்கு உள்ளதா? ஒரு சம்பந்தமும் இல்லை. பெண்களை வன்புணர்வு செய்து கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். நடிகர் விவேக் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நடிகர் வடிவேலு போன்று இன்னொரு கலைஞர் இனிமேல் பிறந்துதான் வரவேண்டும்'' என்று அவர் தெரிவித்தார்.