தமிழ்நாடு

‘அசுரன்’ பிரமிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை- பாராட்டிய சீமான்..!

‘அசுரன்’ பிரமிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை- பாராட்டிய சீமான்..!

Rasus

‘அசுரன்’ திரைப்பட பிரமிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் பூமணி எழுதிய நாவல் ‘வெக்கை’.  இந்தக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் ‘அசுரன்’. தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் மக்கள் மத்தியிலும் நல்ல பாராட்டை பெற்று வருகிறது.

அரசுன் திரைப்படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே பாராட்டியிருந்தார். இந்நிலையில் அசுரன் திரைப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அசுரன்’ திரைப்பட பிரமிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை என  தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ள சீமான், தமிழ்ச் சமூகம் எக்காலத்திற்கும் கொண்டாட வேண்டிய திரைக்காவியம் அசுரன் என பாராட்டு தெரிவித்துள்ளார்.