தமிழ்நாடு

ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்

ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான் திட்டவட்டம்

webteam

ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

ராஜீவ்காந்தி குறித்து சர்ச்சை பேச்சு பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் எழுந்தது. இதையடுத்து விக்கிரவாண்டி போலீசார் சீமான் மீது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். காங்கிரசார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் இந்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இதுகுறித்து சீமான் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இதுபோன்று பல வழக்குகளை சந்தித்து விட்டேன். ப.சிதம்பரத்தை வெளியில் கொண்டுவரவும், என்னை உள்ளே தள்ளவும் போராடுகிறார்கள். இப்போது பேசியதால் என்ன கலவரம் வந்துவிட்டது..? காங்கிரஸ் கட்சியில்தான் கொந்தளிப்பு வந்துள்ளது. வழக்கை சட்டப்படி சந்திப்பேன். 

காங்கிரஸ் எந்த பிரச்னைக்காக போராடியுள்ளனர். இதற்காவது காங்கிரஸ் போராடுவது மகிழ்ச்சியளிக்கிறது. பிரபாகரனை முன்வைத்தே எங்களது அரசியல் பரப்புரை இருக்கும். எங்கள் இனத்தின் தலைவனை முன்னிறுத்துவோம். 

எப்படி பேச வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் விதி உள்ளதா? விடுதலை புலி எங்கு உள்ளது? நான் பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை” எனத் திட்டவட்டமாக கூறினார்.