seeman
seeman pt desk
தமிழ்நாடு

“நாள்தோறும் 650 கோடியை ’குடிப்பதற்காக’ செலவு செய்யும் என் மக்களுக்கு இலவசம் எதற்கு?“ – சீமான் கேள்வி

webteam

திருச்சி திருவெறும்பூரில் தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசனின் 75வது பிறந்தநாள் விழா நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு மணியரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், திருவெறும்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

“பிரபாகரனுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதில் விருப்பமில்லை. ஆனால், நாம் பிறந்தநாள் கொண்டாடுகிறோம். அப்படி கொண்டாடுவதால் நம் உணர்வுகள் இரு மடங்காகிறது. மக்களுக்காக போராடுபவன் தலைவன் ஆகிறான். மக்களை போராட வைப்பவன் புரட்சியாளன் ஆகிறான். வரலாறு எந்த தலைவருக்காகவும் காத்திருப்பதில்லை. இருப்பவன் ஒருவனை தேர்வு செய்து செல்கிறது.

Tasmac shop

காவிரியில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கவலை அடைந்த நேரத்தில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக விளையாட்டு மைதானத்தில் 2.50 லட்சம் குடி தண்ணிரை வீணாக்கினார்கள். இதைக் கேட்ட என்னை சிறையில் அடைத்தனர். என்மீது 176 வழக்குகள் உள்ளன. சிறைச்சாலை நமக்காகதான். நாம் சிறை பறவைகள். சீமானை யாரும் ஜெயிலுக்கு அனுப்ப முடியாது. போனால் எல்லோரும் போவோம்.

தமிழனாக பிறந்தால் மட்டும் தமிழன் இல்லை. யார் இறுதிவரை உறுதியாக உழைக்கிறானோ அவன் தான் தமிழன். ஜாதி, மதம் அடிபடும்போது தமிழனாக இல்லாமல் இனத்திற்கு அடிவிழும் போது கொதித்து எழுபவன் தான் தமிழன். ஒருவன் உயிரை இழப்பதை காட்டிலும் உரிமையை இழப்பது தேசிய மற்றும் நாட்டின் பெரிய இழப்பாகும்.

தமிழ்நாடு என அரசு அலுவலக கட்டடங்களில் தமிழில் பெயர் எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால், அங்குள்ள கோப்புகள் தமிழில் இருக்காது. மோடி தமிழ் மொழி சிறந்தது என்பார். ஆனால், பாராளுமன்ற கட்டடத்தில் ஆங்கிலத்தில் இந்தியில் சமஸ்கிருதத்தில் கல்வெட்டுகள் இருக்கும், தமிழ் மொழியில் இருக்காது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அமைச்சராகவே இருக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.

PM Modi

செப்டம்பர் மாதம் உரிமைத் தொகை தருவதற்கு இப்போது ஏன் விளம்பரம்? அதற்கு எத்தனை கோடி செலவு. நாம் அடிமையான இனம். தாய் நாட்டில் தமிழ் மொழியை படிக்க முடியாது. மற்ற மாநிலங்களில் உள்ள நிறுவனங்களில் அம்மாநிலத்தவர் வேலை வாய்ப்பு பெறுவதற்கு அந்த மாநிலங்கள் 90 விழுக்காடு வாய்ப்பை ஒதுக்கி வைத்துக்கொள்கின்றன. ஆக அங்கு பிற மாநிலத்தவர் என்றால், பத்து விழுக்காடு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஆனால், தமிழகத்தில் 80 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்கிறோம் ஆனால், உயர் நீதிமன்றம் 20 விழுக்காடு தான் ஒதுக்குகிறது. 650 கோடி ரூபாயை நாள்தோறும் குடிப்பதற்காக செலவு செய்யும் நம் மக்களுக்கு எதற்கு இலவசம்? தமிழ் மொழியின் வீழ்ச்சி தமிழர் வீழ்ச்சி. இரண்டு மொழியில் கையெழுத்து போடுகிறார்கள்.

cm stalin

சாலையின் ஓரத்தில் ரேஷன் கடை உள்ளது. அதன் அருகிலேயே மதுபான கடை உள்ளது. பக்கத்தில் வாங்கி கொடுப்பதற்கு எதற்கு இலவசம். கலப்படப் பொருள்களை வாங்க விரும்பாத நாம், தாய் மொழியில் கலப்படம் செய்கிறோம். எதிரிகள், தூரத்தில் இருப்பார்கள்; துரோகிகள், அருகே இருப்பார்கள். தமிழ் வரலாறு திரிக்கப்பட்டுள்ள வரலாறு இல்லை. தமிழ் எங்களுக்கு உயிர்” என்று பேசினார்.