தமிழ்நாடு

தலைமைச்செயலகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

தலைமைச்செயலகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

webteam

நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதையொட்டி தலைமைச்செயலகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். இதையொட்டி சட்டப்பேரவையில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேரவைக்குள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறது.