ஆளுநரை சந்திக்க சசிகலா கடிதம் எழுதியுள்ள நிலையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சசிகலாவுக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே உச்சபட்ச மோதல் நிலவுகிறது. இரு அணிகளாக அதிமுக-வினர் பிரிந்துள்ளனர். தமிழகத்தில் யார் முதலமைச்சராக வருவார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
சசிகலாவும், பன்னீர்செல்வமும் ஏற்கனவே கடந்த 9-ஆம் தேதி ஆளுநரை சந்தித்துள்ளனர். ஆளுநரின் நிலைப்பாடு இதுவரை தெரியவரவில்லை. ஆளுநரின் முடிவை பொறுத்தே அடுத்த நிகழ்வு இருக்கும்.
இந்நிலையில் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். அதேவேளையில் பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமியும் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். இந்நிலையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.