தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

Rasus

சென்னை விமானநிலையத்தில் வழக்கத்தைவிட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அஹமதாபாத் விமானநிலையத்தில் கோக் குளிர்பான பாட்டிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் இருக்கும் விமான நிலையங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை விமானநிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் சென்னை வரவுள்ளதால் அதன்பொருட்டும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.