போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து சென்னையில் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்துகளை சேதப்படுத்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டம் ஓழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்வோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை கூறியுள்ளது. இதேபோல் மற்ற மாவட்டங்களில் உள்ள பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.