தமிழ்நாடு

தமிழகத்தில் உள்ள கன்னட நிறுவனங்களுக்கு பலத்த பாதுகாப்பு

தமிழகத்தில் உள்ள கன்னட நிறுவனங்களுக்கு பலத்த பாதுகாப்பு

Rasus

காவிரி வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி தமிழகத்தில் உள்ள கன்னட நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பிரதான பிரச்னைகளில் ஒன்றான காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. இத்தீர்ப்பின் மூலம் நீண்ட கால பிரச்னை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதை அடுத்து தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும், தமிழக எல்லையான ஒசூரிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பெங்களூருவில் இருந்து ஒசூர் வரை இயக்கப்படும் கர்நாடக மாநில பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தீர்ப்பு வெளியாவதையொட்டி தமிழகத்தில் உள்ள கன்னட நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை தி. நகரில் உள்ள கன்னட பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தமிழகத்தில் உள்ள கர்நாடக நிறுவனங்கள், வங்கிகள் உள்ள பகுதியில் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.