தமிழ்நாடு

ஆவின் சங்கத்தின் 69 லட்சத்தை கையாடல் செய்த செயலாளர் - வங்கிக்கணக்கை முடக்க உத்தரவு

ஆவின் சங்கத்தின் 69 லட்சத்தை கையாடல் செய்த செயலாளர் - வங்கிக்கணக்கை முடக்க உத்தரவு

webteam

ஆவின் கொள்முதல் பணமான 69 லட்சத்தை கையாடல் செய்து அதனை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கிய செயலாளரின் வங்கி கணக்கை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 மதுரை மாவட்டம் மேலத்திருமாணிக்கம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் செயல்படும் தொகுப்பு பால் குளிர்விப்பான் மையத்தின்  செயலாளர் ராமநாதன். அந்தச் சங்கத்தின் கீழ் 59 கிளை சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிளை சங்களுக்கு கொடுக்க வேண்டிய கொள்முதல் விலையான 69 லட்சத்து 44 ஆயிரத்து 259 ரூபாயை ராமநாதன்  தனது பெயரிலும், மனைவி சித்ரா, மகள் ரமா, மகளாக பாவிக்கும் சுபா ஆகியோரது பெயரில் வழங்கியது தெரியவந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து பால்வளத்துறை ஆணையர் வள்ளலார் மதுரை ஆவின் நிர்வாகத்திற்கு ஆணை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் சம்பந்தப்பட்ட ராமநாதன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், அவர்களது வங்கி கணக்குகளை உடனடியாக முடக்கவும், நிதி இழப்பை அவர்களிடமே வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.