High Court, Seeman pt desk
தமிழ்நாடு

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீதான வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் மறுத்து விட்டது.

PT WEB

செய்தியாளர்: V.M.சுப்பையா

கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இனதுரோகி தேசதுரோகி என பேசி, வன்முறையை தூண்டியதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகார் அளித்தார்.

seeman

இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, இறுதி அறிக்கை, சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து, இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளது. இதனால் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர் தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்து விட்டார்.

court order

சீமான் தனிப்பட்ட நபர்களை தூண்டும் விதமாக கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், இதுபோன்ற கருத்துகளை சீமான் பேசக் கூடாது என அவருக்கு அறிவுரை வழங்க சீமான் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.