Sea recedes nearly 100 feet at Tiruchendur beach pt web
தமிழ்நாடு

திருச்செந்தூரில் சுமார் 100 அடி உள்வாங்கி காணப்படும் கடல்!

திருச்செந்தூர் கடற்கரையில் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகிறது.

PT WEB

திருச்செந்தூர் முருகன் கோவில் முன்புள்ள கடல் அவ்வப்போது உள்வாங்கியும், சீற்றத்துடனும் காணப்படுகிறது. இன்று காலை முதல் திருச்செந்தூர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை திருச்செந்தூர் கோவில் முன்புள்ள கடல் திடீரென உள்வாங்கி காணப்படுகிறது. கோவில் முன்புள்ள நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு 100 அடி கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

இதனால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகிறது. அதன் மேல் நின்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.